அஞ்சனா ஜெயராமன் 
காமிரா கண்கள்

அஞ்சனா ஜெயராமன்

Staff Writer

பி.காம் முடித்துவிட்டு, சென்னையில் காஸ்ட் அக்கவுண்ட் மேனேஜ்மெண்ட் படிக்கிறார். ஊருக்குச் செல்லும்போது மறக்காமல் காமிராவை எடுத்துச் செல்வார். ஒளியும் இருளும் ஆடும் விளையாட்டைப் பதிவு செய்துகொண்டே இருக்கும் கண்கள் இவருடையது. அப்படி எடுத்திருக்கும் இந்தப் படங்கள் கொடுத்த துணிச்சலால் புகைப்படக்கலையையே முழுநேரத் தொழிலாக எடுத்துக்கொள்ளலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். படங்களைப் பார்த்தால் ஆடிட்டர் தொழிலுக்கு நிச்சயம் ஒரு ஆள் குறையும் என்றுதான் தோன்றுகிறது.

ஜூலை, 2018.